இந்தியாவிலுள்ள சர்வகட்சி மகாநாடு, காங்கிரஸ் முதலானவைகள் தங்கள் ரிப்போர்ட்டை பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப்போகிறார்கள். சைமன் கமிஷனும் தாங்கள் சேகரிக்கும் விஷயங்களைப் பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப் போகிறது. நம்மை இங்கு ஒருவரும் பொருட்படுத்தாமல் இருக்கையில் நம் பாத்தியதையை யாரிடமேனும் வற்புறுத்தி வைக்கவே நமது கோரிக்கையைக் கமிஷன் முன் ஆஜர்படுத்த வேண்டும். நமது உரிமையை வற்புறுத்த வேண்டிய காலத்தில் நாம் சும்மா இருந்துவிடக் கூடாது. பெரும்பாலோர் சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்காத காலத்தில் 100க்கு மூன்று பேர் ஆகிய நாம் மாத்திரம் ஏன் பகிஷ்காரம் என்று புத்தியில்லாமல் உளறிக் கொண்டிருக்க வேண்டும் என்று
...more

