கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிடக் காமராசர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆகிவிடக் கூடாது. பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகின்றது. அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை
...more

