பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான். இந்த நாட்டுக்கு, இந்த நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டும் என்று கருது கிறவர்கள், இந்த நாட்டின் நிலை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே ஒழிய, மேல் நாட்டைப் பற்றிப் படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையே ஆகும். ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஜாதி முறையின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பானை ஒழிக்கும் முயற்சியே சமதர்மவாதிகளின் முதற் கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்.

