தனித்தனி வகுப்புகளாக பார்ப்பனர்களுக்கு ஓர் இடம், பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு இடம்; பார்ப்பனர் குடிக்கும் தண்ணீர் வேறு, பார்ப்பனரல்லாதார் குடிக்கும் தண்ணீர் வேறு; பார்ப்பனர் சாப்பிடும் இடம் வேறு என்று தனித்தனிப் பிரிவினைகள் இருந்து வருவதும், அதைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்து வருவதும், அதை எதிர்க்கிறவர் களைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்து வருவதும் நியாயம். இவை வகுப்பு வாதம் அல்ல. இவ்வாறு வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும், பேதங்கள் கூடாது, சமத்துவம் வழங்க வேண்டும், அடிமைத் தன்மையொழிய வேண்டும், தன்மானம் பெற வேண்டும் என்று கூறுவது, இதற்காகப் போராடுவது வகுப்புவாதம். உண்மையிலே இதை
...more

