இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது. (அத்தியாயம். 10, ஸ்லோகம்: 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல் கீழான, இழிவான, தீண்டப்படாத, திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10 ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச்
...more

