சமதர்ம வாசனையே சிறிதும் இல்லாதவர்களும் சமதர்மத்துக்குப் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும் எவ்வளவு பாப்பர்களாகவும் இருந்தாலும், எவ்வளவு சோம்பேறிகளாகவும் எவ்வளவு உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையைவிட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர் களாகவும் தானே இருந்து வருகிறார்கள்.

