நான் பிரதிநிதியாக வந்துள்ள பிரதேசத்தில் ஹிந்து - முஸ்லிம் பிரச்சினையைவிடப் பெரிய பிசாசு இருக்கிறது. அது தான். பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சினை. உத்தியோகங்களில் மாத்திரம் சலுகை காட்டப்பட்டிருந்தால் இப்பிரச்சினையைப் பற்றிப் பேச நான் விரும்பியிருக்க மாட்டேன். ஒரு வகுப்பினர் அதிக ரேஷன் உணவு பெற்றாலும் எனக்கு அக்கறையில்லை. ஆனால், என் மாகாணமான சென்னையில் சர்வகலா சாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதிலும் பாரபட்சம் காட்டச் சட்டம் உதவுகிறது. திறமை முக்கியமல்ல; ஜாதியே முக்கியம். கலை, விஞ்ஞானம், என்ஜினியரிங், தொழில் முதலிய காலேஜ்களில் வகுப்புவாரியாக ஸ்தானங்கள் ஒதுக்கப்படுகின்றன. சட்டத்தின் பேரில்
...more

