உதாரணமாக அவினாசிலிங்கம் செட்டியார் என்கின்ற ஒரு திராவிடர் கல்வி மந்திரியானார். அவர் சொல்கிறார், பார்ப்பனர்கள் போல் திராவிடர் களுக்குத் தகுதித் திறமை இல்லை என்று. எதற்கு? உத்தியோகத்திற்கு கூட அல்ல; பள்ளியில் படிக்க சேர்த்துக் கொள்வதற்கே இப்படிச் சொல்லி அநேக திராவிடப் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தகுதி, திறமை பேரால் அநேகப் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தார்.

