சமூகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத்தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையைக் கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்யமாட்டா னென்றே கருதுகிறேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான, சமூக சம்பந்தமான, அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து, மானமிழந்து இழிஜாதியாய் வாழ்கின்றோமேயொழிய, அரசியல் அடிமைத்தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மை யானதாக விரும்பவில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருத
...more

