நான் சொல்கிறேன், நம்முடைய தொழிலாளர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்கப்படா விட்டாலும், கொடுக்கிற சம்பளமாவது அதிகமாகக் கொடுக்கக் கூடாதா? நல்ல வசதியான அறையிலே Fan க்குக் கீழே உட்கார்ந்து கொண்டு, மேஜை நாற்காலியோடு வேலை செய்து குமாஸ்தாவுக்கு 100 ரூ.சம்பளம், நெருப்பிலே உழன்று சம்மட்டி அடிக்கிற தொழிலாளிக்கு 30,50 ரூபாய்தானா? கொடுக்கிற வேலைக்குத்தான் தகுதி, திறமை பார்க்கிறாய்! வாழ்க்கைக்குக் கூடவா தகுதி திறமை? சம்பளத்திலாவது சரி சமன் செய்யக்கூடாதா? தகுதி, திறமை உடையவன் அதிகமாகச் செலவழிக்கவும், தகுதி, திறமை இல்லாதவன் குறைவாகவுமா செலவழிக்கிறான்? எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒரு பெரிய சமுதாயத்தை
...more

