தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் உள்ள அநேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அநேகர் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத்தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் பார்ப்பனர் காலைக் கழுவின நீரை உட்கொண்டால்தான் மோட்சம் உண்டு, அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித்தலை பட்டால்தான் ஜன்ம சாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட்சியை சென்னையில் அதிகமாகக் காணலாம். சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன் என்பதற்காகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை
...more

