வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் உள்ள பல நூற்றுக் கணக்கான வேற்றுமை களில், திராவிடத்தில் குடியேறிப் பார்ப்பனர்களால், இந்நாட்டில் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு வரும் ஜாதிகள் அமைப்பு வடநாட்டில் காண முடியாது. இதன் கொடுமையை அங்குள்ளவர்களால் உணர்ந்து கொள்ளவும் முடியாது. அங்கு இந்து, முஸ்லிம், தாழ்த்தப்பட்டோர், சீக்கியர் வேற்றுமை பிளவு என்று சொல்லப்படுவதைப் போல, பிளவுணர்ச்சி காணப்படலாமே ஒழிய, திராவிடத்தில் உள்ள இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்குள்ளாகவே காணப்படும் ஜாதித் திமிரை அங்குக் காண முடியாது. காரணம், அங்குக் குடியேறிய பார்ப்பனர்கள், ஓரளவாவது சமத்துவமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற
...more

