உழவுத் தொழிலாளியும், விஸ்வகர்மத் தொழிலாளியும் ஒன்று என்பதுதான் நமது அபிப்பிராயம். ஜாதிப் பிரிவால் பேதப்படுத்தப்பட்டு விட்டதல்லாமல் மனித சமூக வாழ்வுக்கு இவர்கள் யாவரும் சமுதாயத்திற்கு அஸ்திவாரம் போன்று இன்றியமையாதவர்கள். ஒரே விதமாகத் தொண்டாற்றுகிறவர்கள். இவர்களில் எதற்காகப் பேதம்காண வேண்டும்? சமயத்தில், சாஸ்திரத்தில் சொல்லும் பேதங்கள் அல்லாமல் பிரத்தியட்சத்தில் என்ன பேதம் காண முடியும்? ஆதலால், தொழில்களில் உயர்வு தாழ்வு களையும், தொழிலாளி சமூகங்களில் உயர்வுதாழ்வுகளையாக்கும் ஜாதி பேதங்களையும் அழிப்பதற்கு முயற்சிப்பதுதான் தொழிலாளர் முன்னேற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு மற்றொரு தொழிலாளி எவ்வளவு உயர்ந்த
...more

