More on this book
Kindle Notes & Highlights
Read between
September 12 - September 12, 2020
வசந்தகாலம். ”புதியதோர் ராஜியத்தினும் விரும்பப் படுவது ஒரு மடக்கு பழைய மது, மதுவின் பாதையல்லாத எந்தப் பாதையிலிருந்தும் விலகிக் கொள்வது உன்னதம்; ஃபெரிதுனின் அரியணையைவிட நூறு மடங்கு மேலானது மதுவின் கடைசிச் சொட்டு, கைகோஸ்ரவுடைய ராஜ்ஜியத்தினும் மேலானது மதுப்பீப்பாயின் மண்மூடி.” - ஒமர் கய்யாம்.
ஆண்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பெண்களிடம் மானசீகமாய் சோரம் போகிறார்கள். பெண்களுக்கு மட்டுந்தான் அந்த வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
அவளுக்கென்றிருந்த சின்னஞ்சிறிய உலகில் யாரையும் வெல்லும் நோக்கமில்லை. ஆனால் இலக்குகளில்லாமல் இருப்பதென்பது ஒருவித வதை. இலக்குகள் மறைமுகமாய் வாழ்வின் நித்யமான கணங்களை உணர்த்துகின்றன
ஒரு மனிதனை எல்லோருடைய நினைவில் இருந்தும் அழிப்பதற்கு சில நாட்கள் தனிமைச் சிறை போதுமானதாயிருக்கிறது.

