More on this book
Community
Kindle Notes & Highlights
யோசித்துப் பாருங்கள். பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான். ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான். பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான். சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ‘ஜூலி ஐ லவ்யூ’ எனக் கிறுக்க மாட்டான். இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது.
எங்கும் எதிலும் ஒரு பொருட்படுத்தப்படாத மனிதனாகவே வாழ்ந்து மடிவது எவ்வளவு பெரிய சாபம்?
ஒரு நூலைத் தொட்ட மறுகணமே உங்கள் ரசனையின் எல்லைகள் விரிவடைகின்றன.
என்னைப் பொருத்தவரை பொழுதை யாரும் போக்கிக்கொள்ளத் தேவையில்லை. அது தானே மறையும் தன்மையுடையது.
கையில் புத்தகம் வைத்திருக்கும் ஒருவனை போலீஸ்காரர் ‘டேய் இங்கே வாடா…’ என விளிப்பதில்லை.
எளிதாக ஏமாறுவதைக் கண்டிருக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத செய்திகள்தான் உங்களுக்கு ஆபத்தாக வந்து முடியும்.
ஒரு புதிய தகவல் என்பது மூளையின் நுட்பமான பகுதியைச் சென்று தீண்டும் டோபோமைன். ஆகவேதான் சமூக ஊடகங்களில் புழங்குபவர்களுக்கு ஒரு ஆரம்பகட்ட உற்சாகம் கிடைக்கிறது. புத்துணர்ச்சி கிடைப்பதான உணர்வு ஏற்படுகிறது. தாங்கள் பிறர் அறியாத பலவற்றையும் தெரிந்தவர்களான ஒரு மயக்கத்தையும் உண்டாக்குகிறது.
எதிர்காலத்தில் நெட்டிஸன் மறுவாழ்வு மையங்கள் நிச்சயம் அமையக்கூடும்.
நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம்.
உங்கள் காதலியை சந்திக்கச் செல்வதென்றால் எத்தனை ஆர்வமாக கிளம்பிச் செல்வீர்களோ அத்தனை ஆர்வத்தோடு புத்தகத்தை நோக்கிப் பாயவேண்டும்.
நல்லவை அனைத்துமே கடினமானதுதான்.
ஒரு பழக்கத்தை அடியோடு நிறுத்துவது மிகவும் கடினம். ஆனால், ஒரு புதிய பழக்கத்தை உருவாக்கிக்கொள்வதும், தொடர்வதும் எளிது. அதன் வழியாக நாம் கைவிட நினைப்பது தன்னால் நிகழ்ந்துவிடும்.
செய்தித்தாள்களுக்கு ‘லிவிங் டெக்ஸ்ட் புக்’ என்றொரு பெயர் உண்டு. உலகம் உருண்டை என்றார் கலிலியோ. நாளையே சங்கரபாண்டி எனும் ஆய்வாளர் உலகம் சப்பட்டை என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிட்டாரெனில் அது உங்கள் பாடப்புத்தகத்தில் மாற ஓராண்டு பிடிக்கும். செய்தித்தாளில் அன்றைக்கே வெளியாகிவிடும். ஆகவேதான் அது உயிருள்ள பாடப்புத்தகம்.
மாணவன் தயாரானால் ஆசிரியர் தானே வந்துசேர்வார்
நீங்கள் வாசிக்கத் துவங்கிவிட்டால் உங்களை நோக்கி புத்தகங்கள் படையெடுக்கத் துவங்கும்.
கனடா மக்கள் தொகையில் 60% பேர் நூலகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியா நூலகப் பயன்பாட்டை மிக வேகமாக கைவிட்டுவரும் நாடு.
நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள். வாசித்ததைச் சொல்லுங்கள். போதும்.

