வாசிப்பவர்களுக்கு மேலதிகமாக நான் சொல்லும் பரிந்துரைகளுள் ஒன்று. அன்றாடம் ஜர்னல் எழுதுவது. டைரி எழுதுவதற்கும் ஜர்னல் எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பதை வெறுமனே தகவலாக எழுதி வைப்பது டைரி. அன்றைய தினத்தில் நிகழ்ந்த விஷயங்களில் உங்கள் பார்வையையும் சேர்த்து எழுதுவது ஜர்னல்.

