More on this book
Community
Kindle Notes & Highlights
ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில்: “கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும் ராஜா!”
நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத செய்திகள்தான் உங்களுக்கு ஆபத்தாக வந்து முடியும்.
“சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்?”
புதன்கிழமை இந்தியாவில் வெளியாகும் தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கல் என அனைத்து நாளிதழ்களிலும் தேசிய அளவிலான வேலைவாய்ப்புச் செய்திகள் வருகின்றன.
செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய். எல்லாம் செய்தவனாவாய். இருக்கும் எல்லாவற்றையும் செய்ய நினைத்தால் அந்த ஒன்றையும் இழந்திடுவாய். பூக்களும் பழங்களும் தேவையெனில் நீ நீருற்ற வேண்டியது வேருக்கே.[1]
வாசிப்பவர்களுக்கு மேலதிகமாக நான் சொல்லும் பரிந்துரைகளுள் ஒன்று. அன்றாடம் ஜர்னல் எழுதுவது. டைரி எழுதுவதற்கும் ஜர்னல் எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பதை வெறுமனே தகவலாக எழுதி வைப்பது டைரி. அன்றைய தினத்தில் நிகழ்ந்த விஷயங்களில் உங்கள் பார்வையையும் சேர்த்து எழுதுவது ஜர்னல்.
வாசித்த நூலைப் பற்றிய உங்களது கருத்தை ஒரு செறிவான கட்டுரையாக எழுதுவது சிறந்த பயிற்சி.
யுனெஸ்கோ லைப்ரரி, நேஷனல் டிஜிட்டல் லைபரரி, ஓபன் லைப்ரரி, ஆர்கேவ்ஸ், தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் என ஏராளமான
https://arunprasathonline.wordpress.com/bookmark/

