நீங்கள் டெல்லியில் நடக்கும் ஊழலின் சிறு முனையைக்கூட மாநிலங்களில் பார்க்க முடியாது. ராணுவ பேரங்களில் எவ்வளவு புரளும் என்பதை டெல்லியில் இருந்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் பொதுவெளிக்கு வரும் ஊழல்களில் பெரும்பாலானவை ஏன் கீழ்நிலைச் சமூகங்களையும் மாநிலக் கட்சிகளையும் மட்டுமே குறிவைக்கின்றன? தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிக்காரர்கள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக் கிறார்கள்?

