தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் எந்த மானேஜ் மெண்ட் கடிதமும் யூனியன் மூலமாகவே போக வேண்டும் என்பது சட்டம். ஆங்கில அறிவு இல்லாத சட்ட நுணுக்கம் தெரியாத தொழிலாளி எங்கேனும் தவறாய் கையெழுத் திட்டுவிடக்கூடாது என்கிற கவனத்தில் கொண்டுவரப் பட்ட காரியம். ஒரிஜினல் மெமோவைக் கொடுத்து விட்டு, நகலில் சம்பந்தப்பட்டவரின் கையெழுத்து வாங்கித் தருவது யூனியன் லீடர் வேலை.

