More on this book
Kindle Notes & Highlights
'நானே பூங்காவனமும் பூவும்' என்று 'மதில்கள்' நாவலில் மையப்பாத்திரத்தின் கூற்றாக ஒரு வாக்கியம் இடம்பெறுகிறது. பஷீரின் படைப்புலகின் அடித்தளம் இதுதான்.
இந்தச் சின்னச் சிறையிலிருந்து வெளியேறினால் உலகப் பெரும் சிறையில் அகப்பட வேண்டியிருக்கும் என்ற உணர்வுதான் அவருக்கு இருக்கிறது.
கறுப்புக் கோடு போட்ட வெள்ளைத் தொப்பி. வெள்ளைச் சட்டை. வெள்ளை வேட்டி. படுப்பதற்கான ஜமுக்காளம். போர்த்திக்கொள்வதற்கான கம்பளிப் போர்வை. சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான பாத்திரங்கள் . . . எல்லாவற்றுக்கும் இருக்கின்றன எண்கள்.
மானுட குலத்துக்கான கடவுளின் பிரத்தியேக வரம் இந்தச் சிரிப்பு.
அப்படியே நடக்கும்போது இந்த உலகத்திலுள்ளவற்றில் மிகவும் அழகான ஓசை. பெண்ணின் சிரிப்பு.
வார்டர் போனார். பிரபஞ்சமென்ற பெரும் சிறைக்குள்ளேயிருக்கும் சின்னச் சிறையில் தனியாக நான். நானும் முடிவின்மையும்.
இப்போதைய இந்தச் சிறைவாசம் இலக்கியத்துக்காக . . . அதில் அரசியலும் இருக்கிறது. நினைத்துப் பார்த்தபோது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
வெளிச்சத்தின் உக்கிரத்தால் எதையும் பார்க்க முடியவில்லை. உலகத்தை இருட்டு மூடியிருந்தது.
நான் இதுவரை இருட்டைப் பார்த்ததில்லை. எதையும் பார்க்க முடியாத அற்புதமான ஆதிக் காரிருளே! முடிவற்ற ஆகாயப் பரப்பில் மின்னி மின்னிச் சுடரும் கோடிகோடி நட்சத்திரங்களே! நிலவொளி ததும்பும் மோகன, மோகனமான இரவே!
வேண்டுமளவுக்குக் கவனிக்கவில்லை. இரவின் அழகை யார் பொருட்படுத்துகிறார்கள்? யார் கவனிக்கிறார்கள்?
பூகோளமே பெரிய ஜெயில்தானே.
ஆனால் ஏதோ ஒன்று இல்லை. யாரோ ஒன்றின், ஏதோ ஒன்றின் இல்லாமை. என்ன அது? வேண்டாம். இந்த யோசனைகள் நல்லதல்ல. பெண்ணைத் தேடித்தான் எல்லா யோசனைகளும் போகின்றன.
மரணத்தை இரண்டு விதமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியனுப்புவேன். அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும். எப்படியிருந்தாலும் செத்துப் போவோம். சிரித்துக்கொண்டே மரணத்தைச் சந்தியுங்கள். மங்களம்.
ஏதாவது ஒரு கட்சியில் சேரத்தான் வேண்டும். ஒரு பக்கத்திலும் சேராமல் சுதந்திர மனிதனாக எல்லாரையும் நேசித்து வாழ முடியாது.
ஆட்கள் கலைந்துபோன பட்டணத்தில் நான் மட்டும் தனித்து விடப்பட்டவன்போல . . . இல்லையென்றாலும் இந்தப் பெரும் உலகத்தில் தனியன்தானே.
அநேக மணி நேரங்கள், அநேக நாட்கள், அநேக மாதங்கள் அநேக ஆண்களின் காதல் ததும்பிய நிமிடங்களின் உழைப்பு அந்தத் துவாரம்.
காம குரோதங்களுள்ள வெறும் மனிதர்கள். ஏராளமான பலவீனங்கள் எங்களுக்குண்டு. எங்களிடம் கருணை காட்டுவாயாக. ஆண் பெண் ஈர்ப்பு கடவுளின் வரம். மறந்து விடாதீர்கள்.
ஜெயிலாச்சே! இங்கே ரகசியமொண்ணுமில்லே
"கடவுள் யார் முன்னாலேயும் வர மாட்டார். கடவுள் நமக்குப் பக்கத்துலதான் இருக்கார். பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களின் வெளிச்சம்; சைதன்னியம்
மேகங்களே, மெதுவாக . . . மெதுவாகக் கர்ஜனை செய்யுங்கள். உங்களுடைய இந்தக் கோரமான ஆர்ப்பாட்டத்தைக் கேட்டால் பெண்கள்
பயந்து போவார்கள். மெதுவாக . . . மெதுவாக.
ஜெயிலிலிருந்து தப்பி வெளியில் போய் என்ன செய்ய? வெளியில் என்று சொல்லுவதும் பெரிய ஜெயிலைத்தான். இல்லையா?
மதிலுக்கு ரத்தமும் சதையும் இருக்காது. ஆனால் அதற்கு ஆத்மா உண்டாகியிருக்கும் இல்லையா என்ற சந்தேகம் வந்தது. மதில் பலவற்றையும் பார்த்தது. பலவற்றையும் கேட்டது.
"பிரியமான நாராயணீ . . . சாவைப் பத்தி எதுவும் சொல்ல முடியாது. யாரு, எப்போ, எங்கே சாவாங்கன்னு கடவுளுக்கு மட்டுந்தான் தெரியும்.
நான் சொன்னேன். "நானே பூங்காவனம். பூவும்." "காயில்லையா?" "காயும்."
சுதந்திரமானவன். சுதந்திர உலகம். எது சுதந்திர உலகம். "பெரிய ஜெயிலுக்கில்லையா போகணும்? யாருக்கு வேணும் இந்தச் சுதந்திரம்?"
இலக்கியத்தை இவ்வளவு தீவிரமாக அணுகும் ஓர் எழுத்தாளன் நம்மிடையே இல்லை என்றும், பஷீர் படைப்புகளின் அபூர்வத்தன்மைக்குக் காரணம் அசுவாரசியத்தின் எல்லா ஓட்டைகளையும் அடைத்து விடும் இந்தப் படைப்பாக்க முறையே என்றும் எனக்குத் தோன்றியது.
மகா ராஜ்ஜியத்தில் சந்திரிகா என்ற பெண்மணி வஸ்திரம் வாங்க முடியாமல் அலைவதாக நாம் அறிகிறோம். அவளுக்கு ஒரு சாரி வாங்கிக் கொடுக்க இந்தக் கடிதத்துடன் பின் செய்து சேர்த்திருக்கும் செக்கைப் பயன்படுத்தவும். இப்படிக்கு பஷீர்.'
சிறப்பிதழ் வெளியானது. 'மதில்கள்' வெளியாகியிருந்ததனால் சிறப்பிதழுக்கு உடனடியாக இரண்டாவது பதிப்பு அச்சிட வேண்டியிருந்தது. பத்திரிகைகளின் வரலாற்றில் அது ஓர் அபூர்வ நிகழ்வாக இன்றும் மிஞ்சியிருக்கிறது.
பெண்ணின் அண்மைக்காக வேட்கைகொள்ளும் தனிமையான ஆண்மனதின் தீவிர வெம்மை தீரல்தான் இந்தப் பெண் மணத்தின் உறைவிடமாக இருக்க வேண்டும்.
பெண்ணின் மணத்தை நமக்கு அனுபவமாக்க பஷீருக்குச் சுருக்கமான சொற்கள் போதுமாக இருந்தன. அதே உணர்ச்சியை, அதே அனுபவத்தைப் பார்வையாளனுக்கு வழங்க ஒரு சினிமாப் படைப்பாளன் முன்னும் பின்னும் பக்கவாட்டையும் வேர்களையும் தேடவேண்டியதாகிறது.
தேடல்கள் நம்மைக் கொண்டு போய்ச் சேர்ப்பது இணையான அனுபவங்களின் இடமாக இருக்கலாம். எனினும் அவை சமானமாக இருப்பது அசாத்தியம்.
இலக்கியவாதியின் 'கும்மிருட்டு' வாசித்து அனுபவிப்பதற்கானது; அனுபவித்துத் தெரிந்துகொள்வதற்கானது. திரைப்படத்தில் 'கும்மிருட்டுக்கு'த் துல்லியமான காட்சிவடிவம்
வம் தர வேண்டியிருக்கிறது. அதற்குக் கட்டாயமாகக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தே ஆகவேண்டும்.
வெளிச்சத்தைச் சாட்சியாக நிறுத்தாமல் இருட்டுடன் எந்த விவகாரமும் இங்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இருட்டு உருவாக்கும் இயல்பான அமைதியை நோக்கியல்ல, அது உருவாக்கும் அனுபவத்தின் தீவிரத்தை நோக்கியே திரைப்பட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஒரே மதிலைச் சிறைக்கு உள்ளேயிருப்பனும் வெளியே இருப்பவனும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லையே.
சொல்லின் வாகனமேறி வாசகர்கள் சென்று சேராத இடமேயில்லை. அனுபவிக்காத சுகமில்லை, துக்கமில்லை, சந்தேகமில்லை, எதிர்பார்ப்பில்லை, பயமில்லை, நிராசையில்லை, நம்பிக்கையில்லை.
அனுபவநிறைவோடு எழுத்தாளனின் ஊடகம் இல்லாமற்போகிறது. அதன் கடமை இட்டுச் செல்வது; பிரதிபலிப்பதல்ல.
விளக்கு ஒளிர்ந்தால் வேறு உலகம் என்பதுதான் இந்த சினிமாக்களின் வெற்றி ரகசியம்.

