திருமணம் என்பது அரசனின் தனிப்பட்ட விவகாரம் என்று அசுரர்களின் எழுதப்படாத விதியொன்று தெரிவித்தது. பல நியதிகளையும் சட்டவிதிகளையும் போலவே, இதுவும் மீறப்படவிருந்தது. குளிர்காலத்தின் முடிவில், நகரில் நடந்த ஓர் அற்பச் சம்பவம், ஒரு பெரிய கலவரத்தைத் தூண்டியது. அரசாங்கத்தின் பிரதானப் பொறியாளனாக இருந்த மயன் இக்கலவரத்திற்குக் காரணமாக இருந்திருப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். அவன் தனது பொறியியல் திறமைகளை வெளிக்காட்ட நினைத்தபோது, அதிக இறுக்கமும் பதற்றமும் பசியும் தலைவிரித்தாடிய ஒரு சமுதாயத்தின் ஒரு நுண்ணிய நரம்பைத் தொட்டிருந்தான். அன்று காலையில் வானம் தெளிவாக இருந்தது. தெருவில் ஏற்பட்டிருந்த
...more

