“மகிழ்ச்சியும் வருத்தமும் பகலையும் இரவையும்போல வெறுமனே இரண்டு நிலையான உண்மைகள். மிக மேன்மையான அறிவைக் கொண்டுள்ள ஒருவன் இந்த உணர்ச்சிகளால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. இவை அடிப்படை உணர்ச்சிகள் அல்ல, மாறாக, நமது எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்புதான். நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, மற்றும் செய்கின்ற விஷயங்கள்மீதான நமது கண்ணோட்டத்திற்கு நாம் நடந்து கொள்ளும் விதமே இந்த உணர்ச்சிகள்.

