More on this book
Kindle Notes & Highlights
ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.
“சங்கீதம் ஒரு பிரதேச மொழியல்ல. அது ஒரு பிரபஞ்ச பாஷை! இந்த அடிப்படை புரியாமல் என்ன சங்கீத ஞானம் இருக்க முடியும்? இந்த விசாலப் பார்வையில்லாமல் என்ன பக்தி ஏற்பட முடியும்? அந்த ஞானம் ஒரு குருட்டு வாய்ப்பாடு. அந்தப் பக்தி ஒரு வரட்டு வெறி.
“மதச்சார்பற்ற அரசு என்பதே இந்திய சுதந்தரத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு சொற்றொடர். இந்தச் சொற்றொடரின் விழுமிய நடைமுறை இன்னும் நம்மிடையே உருவாகவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வட்டிகனைத் தவிர பிற தேசங்களில் மதம் என்பது வேறு, அரசு என்பது வேறு. கோயில் என்பது ‘சர்ச்’ மட்டும்தான். இங்கே நாம் எதையும் கோவிலாக்கி விடுகிறோம். எனவே, கோயிலுக்கும் மதிப்பில்லாமல் ஒழிந்தது.

