Jump to ratings and reviews
Rate this book

6174

Rate this book
தமிழில் அறிவியல் சார் சிறுகதைகள் அறிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூராண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களை படிக்கத் தூண்டும் தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோளாக அமையும் என்று நம்புகிறேன். அவருக்கு எமது வாழ்த்துக்கள்! - பி.ஏ.கிருஷ்ணன்

408 pages, Paperback

First published August 1, 2012

Loading interface...
Loading interface...

About the author

Sudhakar Kasturi

10 books80 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
100 (36%)
4 stars
108 (39%)
3 stars
54 (19%)
2 stars
10 (3%)
1 star
3 (1%)
Displaying 1 - 30 of 44 reviews
Profile Image for Atithyaprasant.
12 reviews6 followers
August 31, 2021
பொதுவாக எனக்கு நாவல்கள் மேல் பெரிய விருப்பம் இருந்ததில்லை. ஆனால் பல நண்பர்களின் அறிவுறுத்தலால் 6174 படிக்க தொடங்கினேன். நான் தமிழில் படித்த முதல் science fiction இந்த புத்தகம் தான். எதற்கு முன் சுஜாதாவின் எழுத்தில் பெரிதும் கவரப்பட்டவன் நான். இந்த புத்தகத்தை படிக்க தொடங்கிய போது சுஜாதாவின் கதைகளில் ஏதேனும் தழுவலாகத்தான் இருக்கும் என்று தான் எண்ணினேன்.

இந்த புத்தகம் சுஜாதாவின் எழுத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. அதே சமயம் சுதாகர் அவர்களின் முதல் படைப்பு இந்த நாவல் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அப்படி ஒரு தெளிந்த எழுத்து நடை. கதையின் வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை எங்கும் குறையவே இல்லை. புத்தகத்தை கீழேவைக்கவே மனம் வரவில்லை. மிக அருமையான படைப்பு. இந்த புத்தகத்தை முடித்தவுடனேயே சுதாகர் அவர்களின் 7.83 ஹெட்ஸ் வாங்கி படிக்க துவங்கிவிட்டேன். அவரின் எழுத்துக்களை மிஸ் பண்ண மனம் இல்லை.

மனிதர் இவளோ தகவல்களை எப்படி சேகரித்தார் என்பது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தை அறிவியல் சுரங்கம் என்றுகூட சொல்லலாம். கிறிஸ்டல்கள், கோலம்,கணிதம்,லொனார் ஏரி,மியான்மார் பகோடா என்னும் ஏராளமான தகவல்களை நாவல் பயணத்தில் அள்ளி கொடுத்துக்கொண்ண்டி போகின்றார். இன்றைய காலத்தில் தனது கற்பனைகளை மட்டும் கொடுத்தால் ரசிகன் விருப்பமாட்டான் என்பதை உணர்ந்து அவலோ தகவல்களை சேகரித்து அதனை கதையின் போக்குடனே நமக்கு ஆசிரியர் கொடுத்துள்ளார். சயின்ஸ் என்று தனியாக ரம்பம் போடாமல், சொல்லவேண்டியதை தெளிவாக, தெவிட்டாத அளவுக்கு வாசகர்களுக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர். இதற்காகவே அவரை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்த புத்தகத்தை படித்து முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டேன். காரணம் இதில் உள்ள தகவல்களை இன்டர்நெட்யில் தேடிபார்த்தபோது அவலோ தகவல்கள் கிடைத்தது. அதை தவறவிட மனம் இல்லாமல் புது புது தகவல் கிடைக்கும்போது அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்பட்டது. லொனார் ஏரி பற்றி முதல்முறையாக நான் அறிந்துகொண்டது இந்த புத்தகத்தில்தான். அதை பற்றி தேட தேட அதிகமான தகவல்கள் கிடைத்தது. ஆசிரியருக்கு மிகுந்த நன்றி.

திரு.சுதாகர் அவர்களை தமிழின் dan brown என்றுகூறினாலும் மிகையல்ல.

மொத்தத்தில் திரும்ப திரும்ப படிக்க தோன்றும் புத்தகம்.
எனது விருப்ப பட்டியலில் மிக முக்கிய புத்தகம்.

Total Rating: 9 / 10
Profile Image for Sudharsan Haribaskar.
48 reviews37 followers
September 8, 2014
வியக்கவைக்கும் டீட்டெய்லிங்.. நிஜமாகவே அட்டகாசமான ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் பார்த்த உணர்வு....ஆனாலும் 250 பக்கங்களுக்கு மேல் கொஞ்சம் வேகம் குறைந்ததையும் இறுதியில் அறிவியல்/கனித/வடிவக்கனித விளக்கங்கள் கதையின் ஓட்டத்தைத் தடுத்து நம்மைக் கொஞ்சம் குழப்பிவிடுவதையும் தவிர்க்க முடியவில்லை...!! ஆனாலும் சுதாகர் தமிழ் டான் ப்ரவுன் என்று அழைக்கப்பட அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்றார்... அறிவியல்/கனிதம்/வரலாறு தொடர்பான தகவல்களில் அத்தனை துல்லியம்... எவ்வளவு ரெஃபரன்ஸ்கள் கடைசியில்...! இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வேகமும்...சுவாரஸ்யம் குறையாத் தன்மையும் வேண்டும்.. நேரம் கிடைக்கும்போது இந்தப் புத்தகம் பற்றி விரிவாக எழுதவேண்டும்.

Update: My blog post about '6174' Novel
http://ungalsudhar.blogspot.in/2014/0...
2,121 reviews1,052 followers
December 7, 2017
அறிவை கொண்டு வரப் போகும் ஆபத்தில் இருந்து தப்பித்தல் சுலபமில்லை.அடுக்கடுக்காகப் பின்னப்பட்டிருக்கும் சூட்சுமத்தை உடைத்து அதன் மையத்தை நோக்கி நகரும் நகர்த்தல் பல வியூகங்களுக்குப் பிறகே பிடிப்படும்.

பூமிக்கும் வரும் அழிவை தனித்தன்மையான எண் 6174 கொண்டு தான் முறியடிக்க முடியும் என்று கண்டறிந்தாலும் அதை அறிவதற்கு முன்னோர்கள் விட்டுச் சென்ற பலபுதிர்களுக்கு ஒவ்வொன்றாக விடை கண்டுபிடித்துக் கொண்டே வரும் ஆனந்த் தேடலின் இறுதிகட்டத்தை நெருங்கிவிடுகிறான்.

பிரமிட் வடிவில் இருக்கும் அழிவை அழிக்கக் கணிதங்களும் அறிவியலும் துணைபுரிந்தாலும் அதைப் புரிந்துக் கொள்ள எடுக்கும் கால அளவில் அந்தப் பிரமிட்டை தேடிக் கொண்டிருந்த மற்றவர்களும் இவர்களின் அருகிலே தங்களின் இருப்பை அமைத்துக் கொண்டு பூமியின் அழிவுக்கு நேரத்தை குறிக்கின்றனர்.

கெட்டது செய்யப் போவதில் இருக்கும் அதீத ஆர்வமே பல நேரங்களில் சாதகமற்றதன்மையை உருவாக்கிவிடும்.

புவிக்கு வந்த ஆபத்து மூதாதையர்களின் அறிவின் திறமையால் தற்கால மனித அறிவைக் கொண்டு தடுத்து நிறுத்தப்படுகிறது.

கணிதங்களும் அறிவியலும் சேர்ந்தது மட்டுமில்லாமல் பண்டைய நாகரீக குறிப்புகளும் ஒருசேர சேர்ந்து இப்புதினத்தை சுவாரசியமாக்குகிறது.

Profile Image for Myvizhi Selvi.
4 reviews
July 18, 2016
Really a very good Science Fiction in Tamil. The way of telling the story is thrilling. This book contains lots of Tamil puzzles, mathematical logic's and information about Lemuria, Myanmar and etc..
Profile Image for Ashok Jp.
14 reviews1 follower
May 3, 2018
Well crafted novel by author. This book will be a good feast for the people who where not aware of Tamil & Tamilan history. It will help you to study about Dravidian history.

Author relates the story from Lemurian era to Human era. He would have been put a large effort in collecting facts for this novel. Brilliant work Mr. Sudakar Kasthuri.
Profile Image for ViNo.
162 reviews11 followers
December 27, 2018
சுவாரசியம் நிறைந்த, திருப்பங்கள் பல கொண்ட, எளிய நடையில் ஆன கற்பனைச் சித்திரம். எண்கள், புதிர்கள், புள்ளிகள், கணிதம், வடிவங்கள், அறிவியல், விண்வெளி என பல பரிமாணங்களை அழகாய் உள்ளடக்கியது.
Profile Image for Ragunathan Pattabiraman.
4 reviews4 followers
August 6, 2018
தமிழில் சுஜாதாவிற்கு அப்புறம் அறிவியல் புனைவு நாவல் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் குறிப்பிட்டுள்ளது போல இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த எழுத்தாளர் தொழில் நுட்பப் பின்னணி கொண்டிருப்பவர் என்பது சிறப்பு. ஒரு கப்பலின் மென்பொருள் திருட்டுத்தனமாக மாற்றப் பட்டபின் அதன் இஞ்சின்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கின்றன. இறுதியில் என்னவாறான மென்பொருள் மாறுதலால் இவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்கப் பட்டுள்ளது. சிறு தகவல் என்றாலும் இது போன்ற டீடெயில்கள் கதையின் நம்பகத் தன���மையை அதிகரிக்கின்றன.

அதைவிடச் சிறப்பு இவரது தமிழ்ப் புதிர் செய்யுள்கள். பழந்தமிழ் போல் தோன்றும் புதிர் செய்யுள்களை இவரே உருவாக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் ஆகச்சிறந்தது என்று இவற்றைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் பெஸ்ட் செல்லர் என்று சொல்லப்படும் புனைவுகளின் பாதிப்பில் எழுதப் பட்ட புத்தகம் என்றாலும், நமக்கே உரிய தனி��்தன்மையுடன் உள்ளது இந்தப் பங்களிப்பு.

இது போன்ற சீரிய முயற்சிகள் இருந்தாலும், இந்த எழுத்தாளருக்கு எழுத்து அனுபவம் குறைவு என்பது ���ெளிவு. கதாப்பாத்திரங்கள் முழுமையாக உருவாக்கப் படவில்லை. பல நூறு பக்கங்கள் கழித்தும் யாரைப் பற்றியும் நமக்கு ஆழ்ந்த அக்கறை உண்டாவதில்லை, அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் பிரதிபலிப்பதில்லை. எல்லாப் பாத்திரங்களும் ஒன்றே போல் சற்று மர்மமாக உள்ளார்கள். கடைசியில் வெறும் தகவல்களாக நமக்கு அவர்களுடைய பின்புலம் சற்று தெரிய வருகிறது. எல்லா நேரமும் ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கிறார்கள்.

இவருடைய எழுத்து இன்னமும் ஆழமாக வலுப்பட வேண்டும். தமிழில் சிறந்த எழுத்தாளர்களை இவர் இன்னும் கூர்ந்து படித்து உத்திகளை கற்றுத் தெளிய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த முதல் நல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Profile Image for Arunram A.
5 reviews1 follower
May 5, 2014
I finished reading the book in two sittings. I did not feel good about reading this book. There are so much of new words - technology jargon and unheard proper nouns which have gone over my head. And the pace of the novel is a little sporadic - for quite sometime nothing happens, and suddenly you are presented with so much of information!

The number 6174 is unnecessarily and artificially merged into so many things. Suddenly a new character is introduced toward the end of the novel, for whom, a little flash back is given - and he is the villain!

It would be better to give some surprise and explain at regular intervals. When things are finally explained we almost forget where, what has happened. A few of the characters, plots left unexplained and open to readers.

I really did not understand how the female lead got to know of the location of actual pyramid and why she had to explain it to the villain. Also, what is that reflecting process, laser inside pyramid, why 6174 in pillars and pyramid - no idea! What are those sets of dots, and how those are related to 6174 and why?!

And there is nothing innovative which is done by the characters, that helps. Seems everything is determined by destiny and happens as expected.
Profile Image for Aravinthan ID.
145 reviews13 followers
June 17, 2015
Well written science fiction novel in tamil. The story starting from Lemuria, and travles to chennai, tiruvananthapuram, kanchipuram, orissa, mianmar and mexico. In novel contains full of puzzles, mathematics and crystallography.
Profile Image for Cindhurajan.
7 reviews6 followers
December 22, 2014
One of the best science fiction novel i have read so far. Though many unknown technical words have been used, it all explained in a well detailed manner.I read the whole book in one sitting and it is very much interesting and informative.
Profile Image for Arvind Srinivasan.
285 reviews14 followers
January 26, 2019
Scientific Thriller in tamil is something first time I am reading. Obviously if you have to write a scientific thriller in tamil region u had to go long long years back and is not as easy as writing in other language on any other region. With years comes complexity and with complexity comes un-easiness in having to explain too much. Even having to go through all those the author comes up with some exceptional story with un assuming huge imagination. For the crux of the story, explanation around it and the amount of thinking went on it the author deserves great accolades.

The plot and way it has been taken has both good pats and confusing blows in it. Similar to other reviews the flow could have been better, might be the author can take a leaf or two from whom the book has been dedicated to (sujatha sir). If certain things can be explained in simple terms it would have made the book lot more effective. Around the last chapter's the scientific and mathematical things explained needed lot concentration to understand them.

This book made me think a lot, human cannot predict anything drastically different away from what they observe. How true it is, the more I think on different situation the more it seems to be exactly right. Go for the book, u will get a different experience and be prepared for lots of imagination and concentration to understand it.
Author 1 book7 followers
September 18, 2019
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் , பல நாட்கள் எதிர்நோக்கியும் காத்திருந்து படித்த புத்தகமிது.தமிழில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் அதுவும் எண்களை வைத்து எழுதப்பட்ட நாவல் என்கிற செய்தியை கேட்டவுடனேயே என் ஆர்வம் விண்ணையைடந்தது. அதே ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்த நான் முதல் நூறு பக்கங்களிலேயே பூமிக்கு வந்தடைந்தேன். லெமுரியா கண்டத்தையும் , எண்களையும் கொண்டு ஒரு நாவல் படைக்க வேண்டுமென்ற ஆசிரியரின் எண்ணம் வரவேற்க்கதக்கது தான். ஆனால் ஒரு நல்ல யோசனையை தவறான களம் கொண்டு சொன்னதால் அது பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. கதையின் ஓட்டத்தில் கவனம் செலுத்திய ஆசிரியர் , கதாபாத்திரங்களை வலிமைப்படுத்துவதிலும் , எடிட்டிங்கிலும் கவனம் செலுத்தியிறுக்கலாம். சமிபத்தில் படித்த தமிழ் நாவல்களிலேயே மோசமான எடிட்டிங் இதில் இருந்தது.நல்ல கதை , இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிறுந்தால் தமிழில் மிகப்பெரிய சயின்ஸ் பிக்ஷனாக வந்திருக்கலாம்.
Profile Image for Kamesh Kumar N.
75 reviews4 followers
December 3, 2018
Author must be appreciated for picking up the science fiction genre in Tamil which is handled only by a few. Lot of information is given but the entire story lacks cohesiveness in presentation. The characters are loosely built probably the author has concentrated more on the science aspect of the story. Lots of riddles constructed in poetic Tamil which is not easy so construct, author has done a good work on this, however the number of riddles are little high and slows down the narration which otherwise started well.

Author has good potential, by reducing the number of pages, concentrating on the character building and improvising the flow in the subsequent works can definitely fetch better results.
Profile Image for MJV.
92 reviews29 followers
September 14, 2019
ஒரு விறுவிறுப்பான அறிவியல் விந்தை கதையினை பார்த்தது போன்ற உணர்வு. இடையில் சில பக்கங்களை விடுத்து பரபரப்பாக சென்ற கதை. லெமுரியாவின் பிரமிடுகளும், லெமுரியா ஸீட் க்ரிஸ்டலின் சக்தியும், சீலகந்த் மீன்களின் வரலாறும் பிரம்மிக்கத் தக்க வகையில் கதையில் சொல்லப் பட்டுள்ளன.

இதற்கு மேல் தமிழ் புதிர்களும் எண்களின் மாயாஜாலமும் புத்தகத்தை கீழே வைக்க விடவில்லை. சுதாகர் மிகுந்த அக்கறை மற்றும் தேடல்களோடு இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அனந்த், ஜானகி, சடகோபன் , சாரங்கன் என பல கதாபாத்திரங்கள். அறிவியல் தாக்கமும் எண்களின் சுவாரசியமும் சேர்ந்து இந்த உலகத்தை அழிக்க நினைத்த சக்திகளை எவ்வாறு அழித்தன என்பதுதான் கதை.

Profile Image for Arun A.
59 reviews6 followers
March 9, 2019
ஆங்கில படம் national treasure போன்ற கதைக்களம். ஆனாலும் முற்றிலும் தமிழ் இலக்கியம், அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தடயங்களும், அறிவியல் தொழில்நுட்ப தகவல்களும் கதையின் சிறப்பான முயற்சிகள். மிகப்பெரிய அளவில் கதையில் வேகம் இல்லை. இதுபோன்ற முயற்சிகள் ஊக்கிவிக்கப்பட வேண்டுமென்றால், இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கலாம்.

முக்கியமான சில தகவல்களான ஹர்ஷத் நம்பர்ஸ், கப்ரேக்கர் கான்ஸ்டன்ட், சீல்கந்த் மீன்கள், லெமுரியன்ஸ் மற்றும் அவர்களுடனான தமிழர்களின் தொடர்பு இவைதான் புத்தகத்தை முழுமையாக படிக்க உதவியது. ஆசிரியரின் முதல் புத்தகமாதலால் எண்ணற்ற அளவில் தகவல்களை வாரி இறைத்துள்ளார். அதில் குறையொன்றும் இல்லை. அனைத்தும் அறிவியல் சார்ந்தவை, ரசிக்கக்கூடியவை. திரில்லர் கதைகளில் ஆர்வம் உள்ளோர் இந்த புத்தகத்தை படிக்கலாம்.
Profile Image for Meenakshisankar M.
118 reviews5 followers
July 30, 2019
This science-fiction adventure novel in Tamil had an excellent premise and a great beginning, but the writing was very disappointing. I liked the underlying mystery and the puzzles/poems/red-herrings that were inserted into the story by the author to disclose the clues here and there, almost like Dan Brown. However, the characters were quite ordinary and the narration was very confusing after a point. However a good attempt in Tamil.
Profile Image for Tamizharasan.
10 reviews2 followers
August 27, 2018
கதையானது பல புதிர்கள் அதற்கான தேடல்கள், அதி நவீன தொழில் நுட்பம், வரலாறு, பழங்கால தமிழ் மொழி என பல தளங்களில் மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்டது. இக்கத��� படிக்கும் போது சுஜாதா அவர்களின் விஞ்ஞான கதையின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது, என்ன அவரின் கதையோடு ஒட்டி வரும் நகைச்சுவையும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Profile Image for Saravanakumar S K.
52 reviews3 followers
April 2, 2020
Probably the best science fiction of our current time excluding Sujatha's. The details about many Scientific realities be it Lonar crater lake in Maharashtra to Coelacanth fish is amazing. I haven't found such a great novel in Tamil on this genre. The only missing piece was characters and their relationship. None of them impressed us. Maybe the author tried a melancholy. But it didn't suit well.
Profile Image for Vairavel.
142 reviews4 followers
May 30, 2017
While the plot and efforts are laudable the story telling aspect in a coherent manner was completely missing.
3 reviews
August 27, 2017
நல்ல புத்தகம்... A must read book if you are a history / tamil lover... very well narrated by the author.
5 reviews
October 4, 2018
I feel the Lemuria

Very rare science based story, esp with historical, archeological proofs. I like the tamil poems(kalvettu lyrics). Waiting for more books like this.
1 review
March 31, 2019
A pakka scientific thriller book in tamil . If you ever wanted to read a holly-wood like story in tamil ,this could be the best option for you.
20 reviews9 followers
November 19, 2019
Definitely entertaining but some places felt needlessly stretched. Was happy to find a breezy, light read in Tamil after long.
May 12, 2022
One of the best science fiction book in Tamil.
History, physics, chemistry, astronomy, mathematics, AI, Old tamil poem templates are covered with the flow of the story. Worth reading
Profile Image for Saravanan.
344 reviews19 followers
October 24, 2018
Oct 12: இருநூறு வருடங்களுக்கு முன், எடுத்து வந்தவர் ஒரு இந்தியர்? ஏம்பா கதாசிரியரே! இருநூறு வருடங்களுக்கு முன் இந்தியா என்ற ஒரு நாடே இல்லை, ஏன் இப்படி பொய்யை பரப்புகிறீர்கள்?

Oct 24: கதாசிரியர்கள் மட்டுமல்ல பலர் உலகம் உருவான போதே இந்தியா என்ற நாடும், இந்து என்ற மதமும் உருவானது போல் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள். தற்போதைய ஒடிசா என்பதை போல் தற்போதைய இந்தியா என்று சொல்வதில் என்ன தவறு? தமிழர்கள் போரில் வெற்றி பெற்று குடியேறிய இடமா ஈழம்?

அவன் அதை செய்தான், இவன் இதை செய்தான். அவன் யார், இவன் யார் என்று சொல்லிவிட்டால் விறுவிறுப்பு குறைந்து விடுமா? ஆரம்பத்தில் வரும் வீரன் எனும் கதாபாத்திரம் அப்படியே மறைந்து விட்டது என்று நினைக்கிறேன். தனிச் சிறப்பு வாய்ந்த 6174 எண், சில புதிர்கள், கோலங்கள் என நான் படித்த மற்ற கதைகளிலிருந்து இக்கதை வித்தியாசமானது. அதனால் 4.
Profile Image for Varun19.
13 reviews7 followers
June 6, 2019
6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.

இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது.

இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார்.
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.

கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்கு��ியது.

"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே
சீரிய கட்டமதில் தடயம் காண்"

ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ; 18/9 = 2
21 -> 2+1 = 3 ; 21/3 = 7

"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"

கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
-> 8820 - 0288 = 8532
-> 8532 - 2358 = 6174

கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன். கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில் நாவலின் முழுமையை நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து.

வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும்.

ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன்.

தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Amrish Vasudhevan.
10 reviews1 follower
September 26, 2017
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு அறிவியல் புனை கதை. கேட்டவுடன் படிக்க தோன்றியது. சுஜாதாவிற்கு பின் அறிவியல் புனை கதைகள் அரிதாகி போய் விட்டது. அவருடைய எழுத்துக்கள் தமிழ் வாசிப்பாளர்களில் ஒரு மிகபெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. என்னையும் சேர்த்து. என்னுடைய புத்தக ஆர்வம் கூட அவரிலிருந்து தொற்றிக் கொண்டதாகவே நினைக்கின்றேன்.

6174 - ஒரு வித்தியாசமான தலைப்பு. 400 பக்கங்களுக்கு மேல் தமிழில் ஒரு அறிவியல் திகில் புனைகதை இதுவரை நான் கண்டதில்லை. புத்தக ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி நிறைய இடங்களில் சுஜாதாவை ஞாபக படுத்துகிறார். நேர்த்தியான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை குறும்புகளோடு எழுதப்பட்டிருக்கிறது.

ஆங்கில எழுத்தாளர் டான் பிரவுனின் நாவல்களின் இணையான ஒரு படைப்பாக முயர்சித்திருக்கிறார். கதை போகிற போக்கில் சற்று அறிவியலையும் நம் தமிழ் எழுத்துகளின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு நயமான விடயம். அதையும் செவ்வனே செய்திருக்கிறார்.

லெமூரியர்கள், எண் மற்றும் வடிவ கணிதம், படிக அறிவியல், தமிழ் புதிர்கள், பிரமீடுகள், உலக அரசியல் நிகழ்வுகள், ரா என்று அனைத்தும் அடங்கும் விதமாய் எழுதப்பட்டிருப்பது ஆவலை தூண்டுவதாக இருந்தாலும் சில இடங்களில் கதை இழுத்துக் கொண்டு போவதாக தோன்றியது. சில இடங்களில் லாஜிக் இடித்தது. நடக்க போவது எல்லாம் ஏற்கனவே முடிவு செய்து விட்டது போல் எழுதப்பட்ட புதிர்கள் குழப்பியது.

மூன்றாம் உலக போர் மூளும் விதமாக உலக அரசியல் நிகழ்வுகளை கதைக்கு சாதகமாக அமைத்திருக்கிறார். இது தான் இந்த நாவலுக்கு பிரம்��ாண்டமான கதைகளத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த பிரமாண்டம் இறுதி வரை தொடர இன்னும் கொஞ்சம் கதையில் வலு சேர்த்திருக்கலாம். மற்றபடி இந்த கதையமைப்பு அருமை.

நான் படித்த வரை தமிழுக்கு இது புதிது தான். இன்னும் இதுப் போல் புத்தகங்கள் தொடர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Other Book Reviews / பிற நூல் மதிப்புரைகள்
Displaying 1 - 30 of 44 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.