கொடைமடம், சுக்கிரி- உரையாடல்
அன்புள்ள ஜெ,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் காலத்தில் நண்பனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. ஜெயமோகன் கதைகளை சிலர் ஸூம் வழியாக இன்று உரையாடுகிறார்கள் என்று. அன்றைய ‘ஆனையில்லா’ கதை பற்றிய உரையாடலில் சுனில் கிருஷ்ணன், ஜாஜா, காளிபிரசாத், விஜய்சூரியன், சிட்னி கார்த்திக், விஜயராகவன், சுபஸ்ரீ இன்னும் பல நண்பர்கள் பங்கேற்று கதையின் வடிவம், மொழி, நிகழும் சூழல் என பல அடுக்குகளைப் பற்றிப் பேசினார்கள். சிறுகதை உரையாடல் என்பதைத் தாண்டி அன்றைய காலகட்டத்தில் ஒரு கொண்டாட்டமான மனநிலையை அந்த சந்திப்பு உருவாக்கியது.
அதைத் தொடருவதென முடிவெடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அடுத்தடுத்த புனைவுக் களியாட்டுக் கதைகளுக்கு ஸூம் அழைப்புகள் திட்டமிடப்பட்டன. அடுத்த சில வாரங்களில் இச்சந்திப்புகள் சுக்கிரி என்ற பேரில் வாட்ஸாப் குழுவாக இணைக்கப்பட்டு சந்தோஷ், கணேஷ் இருவரால் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஐந்து வருடங்களில் தங்கள் புனைவுக்களியாட்டுக் கதைகளைப் பேசி முடித்தபின் அ.மு, அம்பை, திலீப்குமார், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், சு.ரா, ஜெயகாந்தன், கோணங்கி, அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, தி.ஜெ, ல.சா.ரா, புதுமைப்பித்தன், கி.ரா இன்னும் பல எழுத்தாளர்களின் கதைகளையும் சேர்த்து மொத்தம் 250 கதைகளுக்கு மேல் அடங்கும்.
மீண்டும் கடந்த மூன்று வாரங்களாக திசைகளின் நடுவே, போதி, மாடன் மோட்சம் என்று உங்கள் கதைகளுக்குத் திரும்பியுள்ளோம். சிலர் வெளியேற, புதிய வாசகர்கள் இணைய என்று ஒவ்வொரு வாரமும் 15 நண்பர்களாவது இந்த உரையாடலில் பங்கேற்றுத் தொடர்கிறார்கள்.
இதன் நீட்சியாக மாதமொருமுறை ஒரு நாவல் பற்றிய உரையாடலையும் முன்னெடுக்க உள்ளோம். ஒவ்வொரு வாரமும் சிறுகதை உரையாடலை ஒருங்கிணைக்கும் நண்பர் பழனிஜோதி அக்டோபர் 12ம் தேதி எழுத்தாளர் சாம்ராஜ் எழுதிய ‘கொடை மடம்’ பற்றி தன் வாசிப்பை முன்வைக்கிறார். அதன் பின் நண்பர்களுடன் கலந்துரையாடலும், எழுத்தாளர் சாம்ராஜ் உரையும் திட்டமிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழில் உள்ள ஸூம் இணைப்பைப் பயன்படுத்தி ஆர்வமுள்ள நண்பர்கள் வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு பங்கேற்க வேண்டுகிறேன். தொடர்ந்து பங்கெடுத்து நட்பார்ந்த சூழலைத் தொடரும் சுக்கிரி நண்பர்களுக்கும், இவை அனைத்திற்கும் காரணமான ஆசிரியர் உங்களுக்கும் நன்றி.
ZOOM Meeting link:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
Passcode: 197116
அக்டோபர் 12, ஞாயிறு மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
சுக்கிரி சிறுகதை கூட்டுவாசிப்பு – சனிக்கிழமை, மாலை 5 மணி (இந்திய நேரம்)
***
அன்புடன்,
ராஜேஷ்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

