1 கஞ்சா மயக்கத்தில்சிறுதுளி சர்க்கரையும்கோஹிநூர் வைரமாய்த் தெரியும்அப்படித்தான் நீபேனைப் பெருமாளாக்கிஎன் கையில் திணிக்கிறாய். மறுக்கிறேன்கவிதை எழுதச் சொன்னது நீங்கள்இப்போது வார்த்தைகள் கவிதையாகிஎன் விரல்களை மீறி வழிகின்றனநிறுத்தும் வழி தெரியவில்லைஒவ்வொரு எழுத்தும் நீங்களேஎழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்பார்வைக்கு வருகிறதுஎந்த அவசரமுமில்லைவாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி அது என்னதிடீரென்று நீங்கள்? பாராட்டு தேவையில்லைசன்மானம் கேட்கவில்லைவாசித்த விவரமறிந்தால்ஒரு மெல்லிய மகிழ்ச்சிஅதற்கும் தாளிடுபவர்களைவேறெப்படி அழைப்பது? 2 நீயில்லாமல்என் கவிதையில்லைநீ அதை வாசிக்கையில்-அது ஒரு நதியின் நிழலாய்என் கரையையும்உன் மௌனத்தையும்இணைக்கிறது
Published on July 22, 2025 22:20