பொதுமக்கள் சேவைக்கான அரசு அலுவலகம்சிஸ்டம் வேலை செய்யவில்லையெனக்காத்திருந்த நேரத்தில்அங்கிருந்த மனிதர்களை நோக்கினேன்நாற்பது ஐம்பது பேர் இருக்கலாம்ஒவ்வொருவர் முகத்திலும்ஏதோ நோய்மையின் நிழல்மருத்துவமனை அல்ல அதுஆனாலும் அவர்கள் நோயாளிகளின்தோற்றம் கொண்டிருந்தார்கள் அவர்கள் ஒருபோதும்வாய்விட்டுச் சிரித்துகாற்றுடன் கைகோர்த்துநிலவின் குளிர்மையில் திளைத்திருக்க மாட்டார்கள்பிறர் பசியின் வலியுணர்ந்து வெகுண்டிருக்க மாட்டார்கள்மலையடிவாரத்தின் தனிமையில் தோய்ந்திருக்க மாட்டார்கள்கவிதையுடன் மௌனித்துஅண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள் மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள் காதல்மிகக் கொண்டு முத்தமிட்டிருக்க மாட்டார்கள்கலவியின் பரவசம் கண்டிருக்க மாட்டார்கள்பிறர் துயர் கண்டு கசிந்திருக்க மாட்டார்கள்வாடிய ...
Read more
Published on July 06, 2025 06:36