”அண்டத்தின் விகசிப்பில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்ற வரியில் ஒரு பெரிய பிழை உள்ளது. விகசிப்பு, விகாசம் என்றால் மலர்ச்சி என்று பொருள். சந்தேகப்பட்டுத்தான் நிகண்டில் பார்த்தேன். எனவே அந்த வாக்கியம் “அண்டத்தின் பிரமாண்டத்தில் தம் சிறுமை உணர்ந்திருக்க மாட்டார்கள்” என்று வர வேண்டும். மூலத்தில் மாற்றி விட்டேன். யாரும் இது பற்றிக் குறிப்பிடாதது சற்றே வருத்தம். கவிதையில் இன்னொரு வாக்கியமும் சேர்த்திருக்கிறேன். “மரணம் கண்டு நகைத்திருக்க மாட்டார்கள்”. கவிதையைத் திரும்பவும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் ...
Read more
Published on July 06, 2025 08:58