என்னுடைய பெட்டியோ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன். மொழிபெயர்ப்பாளருக்கு நான் இரண்டரை லட்சம் கொடுக்க வேண்டும். அதில் ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன். மீதி கொடுக்க வேண்டும். வாசக நண்பர்களிடம் கேட்டேன். இருபதாயிரம் வந்தது. கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம். கிடைத்தது இருபதாயிரம். ஒரு இருபது நண்பர்களுக்கு இது பற்றி நான் எழுதியிருந்த வேண்டுகோளை வாட்ஸப்பில் அனுப்பினேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை. பணமும் வரவில்லை. ஒரே ஒரு நண்பர் பதில் எழுதினார். ...
Read more
Published on June 25, 2025 00:33