பெய்ரூட்டின் பிரதான ஹம்ரா தெருநானும் அமல்ராஜும் நடந்து கொண்டிருக்கிறோம்ஒரு உணவு விடுதியின் வாசலில் அமர்ந்துஒரு ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅவர்களுக்கு எதிரே ஒரு பெண்தன் வலதுகரத்தை நீட்டிக்கொண்டிருக்கிறாள்பதின்மூன்று வயது இருக்கலாம்ஹிந்திப்பட ஹீரோயின் தோற்றம்ஜோடி அவளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅதிர்ச்சியுடன் அமல்ராஜைப் பார்க்கிறேன்சிரியா என்கிறார்.
Published on June 18, 2025 18:16