நான் என்ன செய்து விட்டேனென்றுஎன்னைக் கயிற்றில் தொங்கவிடத் துடிக்கிறீர்?யாரும் செய்யாததையா செய்து விட்டேன்?அடித்தால் செத்து விடுவாளெனக் கண்டேனா? வேலை செய்து செய்து என் கரங்கள் இரும்பாகிவிட்டன, அது என் பிழையா?அவளென்ன, என்னைக் கொஞ்சமா சித்ரவதை செய்தாள்?எந்த வேலை சொன்னாலும் உருப்படியாய்ச் செய்ததில்லை. எப்போதும் ஒரு யோசனைஎந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறாய்சொல், ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம்என்றால் ஒரு பதிலும் வராது சமைக்கச் சொன்னால்,தெருநாயும் சீந்தாத ஒரு சாப்பாடுநான் சமைத்தால் பன்றி போல் தின்கிறாள் மனித வாழ்வில் உணவுக்குப் ...
Read more
Published on June 19, 2025 00:43