நதியாய் ஓடும் கண்ணீரில்உலகம் மூழ்கஅரச குமாரன்துயரின் நிழலைத் தொட்டான்.மனைவியின் மென்மைசிசுவின் புன்னகைகாற்றில் கரைந்தன.குதிரையின் உயிர்பாதையில் உறைந்தது. ஞானம் ஒரு தீப்பொறிபிரேதங்களின் மீது நடந்துஎங்கெங்கோ அலைந்துதவத்தின் எலும்புகளை அணிந்துஒளியின் மொழியைத் தேடினான்.வழி மறைந்திருந்தது. நாற்பத்தெட்டு நாட்கள்அன்ன ஆகாரமின்றிஎலும்பும் தோலுமாய்மரத்தடியில் நிலைத்தான்நதியின் மௌனம் தவழ்ந்ததுசுஜாதையின் கரங்கள்தங்கத்தில் பால் அன்னம் தந்தன.உயிர் மீண்டதுஞானம் இன்னும் மறைந்திருந்தது. உயிர் மீண்ட தருணத்தில்அவன் கண்டான்:உடல் துயரின் பாதையல்ல.நிழலும் ஒளியும் ஒன்றே,மரமும் மனமும் ஒன்றே.ஞானம் மௌனத்தின் மொழியென்ற ஞானம்அவனுள்ளே பிறந்தது.
Published on June 07, 2025 09:56