நான் கொல்லுதல்
நிலவு ஒரு மௌனக் கண்ணாடி,நட்சத்திரங்கள் மறந்து போன கடவுச்சொற்கள்என்னைப் பார்க்க மறுக்கின்றன.குழந்தைப் பருவத்தில்பெரியோரின் முகம் பார்க்கஅண்ணாந்தவன்வானத்தைப்பார்க்க வாய்த்தவன்அதே வானம்தான்என் மீது புழுதியைக் கொட்டுகிறது. சத்தியம் ஒரு தொலைந்த நதிஅறம் வதந்திகளின் எதிரொலி பிறரின் கண்ணீரை வண்ணமாக்கிகதைகளை வரைகின்றேன்ஜீவன்களின் தோழனெனமுகமூடி அணிகின்றேன்.கேள்விகளுக்கு பதிலில்லைஆனாலும்ஒரு மூட்டை பதில்களுடன்ஆங்காங்கே அலைகின்றேன்அஞ்ஞானியாய் இருந்துகொண்டுஞானத் தோரணையில் திரிகின்றேன் கொசு, கம்பளிப்பூச்சி, கரப்பான் பூச்சி, அட்டை,மரவட்டை, எறும்பு, பூரான், பாம்பு, கோழி, ஆடு, ஈசல், கொக்கு, மடையான், தவளை, உடும்பு, மண்புழு,வண்ணத்துப்பூச்சியென்று நான் கொன்ற ஜீவன்கள்ஏராளம். நான் ஒரு பயணி,கரங்களில் மரணத்தின் முத்திரைபெண்களின் கண்ணீர்மனதின் கறைகளாகத்திரள்கிகின்றனஅன்பை உறுதியளித்து,துரோகத்தை மட்டுமே தருகிறேன். கருணை ஒரு மறந்த மொழிநேசம் ஒரு உடைந்த பாலம் அன்புக்குத் துரோகம்பரிவுக்கு வன்மம்கருணைக்குக் குரோதம்கனிவுக்கு மூர்க்கம்அருளுக்கு ஆணவம்நேசத்துக்கு முரட்டுத்தனம்தயவுக்குத் திமிர்என் வாழ்க்கை இதுதான் மனையாளிடம்நான் உச்சரிப்பது பொய்யின் மூச்சு மட்டுமே. ஒரு பெண்ணுக்கு சுகம் தருவதாய் வாக்களித்துஉடலின் தோல்வியில் மூழ்கியிருந்திருக்கிறேன் வழிபாட்டுத் தலங்களில்மனம் ஆடைகளை உரிக்கிறது குடியில் மூழ்கி,கீறல் விழுந்த இசைத்தகடாய்ஒரே புலம்பலைஒன்பது முறை எதிரொலிக்கிறேன். மனிதவுருக் கொண்டுவாழ்ந்தாலும்நானென்பவன்ஒரு நிழல்ஒரு கவிஞன்மேலும்கைவிடப் பட்டசொற்களின் குவியல்.
Published on June 06, 2025 17:31
No comments have been added yet.
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

