ஆகப் பிடித்த புத்தகம்—பழைய காகிதத்தில்பழுப்பு நிற மணம் மறையாவார்த்தைகள் ஆகப் பிடித்த எழுத்தாளர்—காற்றில் கவிதைகளைச் சுருட்டி வீசுபவர். ஆகப் பிடித்த உணவு—என் அம்மை ஆண்டாளுக்குப் பிடித்தது ஆகப் பிடித்த மது—இரவை மறந்து சிரிக்க வைக்கும் திராட்சை ரசம் ஆகப் பிடித்த பொழுதுபோக்கு—மேகங்கள் தீட்டும் சித்திரங்களில்என்னை இழப்பது ஆகப் பிடித்த சினிமா—என்னை எனக்கே நினைவூட்டும்பாத்திரங்களின் சலனம் எல்லாம் சொன்னேன். ‘ஆகப் பிடித்த தருணம்?’என்றார் கடவுள், ‘ஒரு மலைவாசஸ்தலத்தில்,முன்னிரவு நேரத்தில்,நெருப்புக் கம்பளம் பரவி எரிய,பைன் தேவதாரு மரங்கள் மெல்லிய பாடல் ...
Read more
Published on May 29, 2025 23:23