3 பிறந்தநாளைச் சொன்னால் என்ன?சொல்லாவிட்டால் என்ன?அது ஒரு வெறுமையான நாள்,ஏன் அதைப் பிடித்துத் தொங்குகிறாய்?நீயும் நானும் ஒரு மதுக்கடையில்வைன் குடித்தபடி இது பற்றிப்பேசலாம்ஆனால் இந்தப் பிறந்தநாள்ஒரு பயனற்ற காகிதத்தில் எழுதப்பட்டமற்றொரு எண்ணிக்கை. 1நான் ஒரு தீர்க்கதரிசி,மதங்களை நம்பாதவன்.அதனால் புது மதத்தைஉருவாக்கவில்லை,என் தரிசனங்கள் சிலரின் பாதையைமாற்றினஅதனால் என் பிறந்தநாள் ஒருசிறிய வெற்றிஒரு குடிகாரனின்கடைசிச் சிரிப்பு மாதிரி. 2உன் பிறந்த நாளைநான் கொண்டாடுவேன்,ஏனென்றால்,எனக்கு நீஒரு பாழடைந்த பட்டணத்தில்எரியும்கடைசி தீபத்தைப் போல.
Published on May 27, 2025 09:10