1 எல்லாமே திட்டமிட்டபடிதான்நடப்பதாகச் சொல்கிறார்கள் யோகானந்த பரமஹம்ஸர்ஒரு குறிப்பிட்ட தேதியில்தன் உடலை விட்டுப் பிரிவதாகஅறிவித்தார்‘என் உடலை இருபது நாட்கள் வைத்திருங்கள், ஒன்றும் ஆகாது’என்றார்உடல் சிதையவில்லைபிணவறை அதிகாரிவியந்து சான்றளித்தார் தியாகராஜரும்ஒரு வாரத்துக்கு முன்பேநாத தனு மனிஷம் பாடிசீடர்களிடம் விடைபெற்றார் ஞானிகளை விடுங்கள்அஞ்ஞானியான என்னிடமேநாலு சோதிடர் நாலுவெவ்வேறு காலத்தில்நாலு வெவ்வேறு இடங்களில்வைத்துஎன் மரண காலத்தைஒன்றே போல் குறித்தனர் 2 நானொரு பேரரசன்எனக்கொருஅந்தப்புரம் இருந்ததுஅரசர்கள் அந்தப்புரத்தில் குடியிருப்பார்களா?நானோ அங்கேயேஅடிமையானேன்மதில்களும் அகழிகளுமில்லாதபின்நவீனத்துவ அந்தப்புரம்அழகிகள் எங்குவேண்டுமானாலும்செல்லலாம்யாருடன் வேண்டுமானாலும்கூடலாம் எந்த வரைமுறையுமில்லை வெளியிலிருந்த சிநேகிதிகள்பயமுறுத்தினார்கள்மீட்டூவில் மாட்டிவிடுவாயென ...
Read more
Published on May 06, 2025 23:57