ஆம்நீவிர் இந்தக் கதையைநம்ப மாட்டீர்எத்தனையோ பேரிடம்இயம்பினேன்கருவிகளின் காலம்கவியின் கதைஏற்பார் எவருமில்லை ஒரு ஊரிலே ஒருஅகோரி இருந்தார் அகோரிக்கொரு மனையாளும்ஒரு புதல்வனும்ஒன்பது சீடர்களுமுண்டு அவர் அகோரியெனஉலகமறியாதுஅறிந்தோர் சீடர் மட்டுமே உயர்படிப்பும்ஆய்வும் முடித்துடாக்டர் பட்டம் பெறுவது போலவேஅகோரியாவதும்! அதுவொரு பாடத்திட்டம் மலத்தை மகிழ்ச்சியுடன்தின்ன வேண்டும்கலவியிலேகளிகொள்ளக் கூடாதுஆசை துக்கம்கோபம் பொறாமைகாமமெதுவும் கூடாதுநெருப்பிலெரியும்பிரேதத்தின் மீதமர்ந்துகொஞ்சமாய் தவமிருக்கவேண்டும் அவ்வளவுதான் எல்லாம் செய்தார்அகோரி அப்போது அவர் முன்னேவந்துதித்தமசானக் காளிஎன்ன வரம் வேண்டுமென்றாள் எது வரமும் வேண்டாம்ஆயிரம்கோடி அழகெலாம் திரண்டொன்றாகிநிற்கும் உன் அருட்செல்வம் எனக்குண்டுபொருட்செல்வமும் குறைவில்லைஎனக்கென்ன வேண்டும் ...
Read more
Published on April 23, 2025 01:11