Adele பாடிய‘மழைக்குத் தீ மூட்டியவள்’பாடலைக்கேட்டிருக்கிறாயா? நீயும் மழைக்குத் தீமூட்டுபவள்தான்மழைக்கு மட்டுமல்லதென்றலுக்குத் தீசாற்றுபவள்கடலுக்கும்மலைகளுக்கும்அருவிகளுக்கும்தீ ஏற்றுபவள்என்று நீ என்னைமுத்தமிடும்போதுபுரிந்துகொண்டேன். நீ கொண்டுவரும் தீசுடத்தான் செய்கிறதுஆனால்தேனினுமினிமையும்வலி நீக்கும் ஜாலமும்வசந்தத்தின் குளிர்மையும்கோடைமழையின் மணமும்மலர்வனத்தின் ரம்மியமும்வானவில்லின் அதிசயமும்கொண்டிருக்கிறது பிற்பாடுதான் தெரிந்ததுநீ ஏந்துவது தீயல்ல“நினைந்து நைந்து உள்கரைந்துஉருகி”யோடும்கருணையின் ஸ்தூலமென்று…
Published on April 21, 2025 06:13