நண்பர்களோடுதங்கியிருந்த அறையின்பின்புற பால்கனி அதன்கீழே எப்போதும்சுநாதமெழுப்பியபடிஓடிக்கொண்டிருக்குமோர்ஓடை எட்டிப் பார்த்தால்அச்சமூட்டாதசிநேகமான அருவி அடர் வனத்தில்சூரியனைக் காணமுடிவதில்லை காலை பத்து மணியிருக்கலாம்யாரும் எழுந்துகொள்ளவில்லை பால்கனியில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருக்கிறேன் மரங்களோடும்அருவிகளோடும்நதிகளோடும்பிராணிகளோடும்வாழ்ந்திருந்த மனிதன்இப்படிநகரமயத்தினின்றும் விலகி வந்துதான்இதையெல்லாம்எட்டிப் பார்க்க முடிகிறது அப்போது பெருத்தவுடல்கொண்டவொரு குரங்குபால்கனியின் இரும்புக்கம்பியில்குதித்தமர்ந்து“பசி..பசி” என்றது அறைக்குள் சென்றுபழுத்து முதிருந்திருந்தவொருபப்பாளியைக் கொண்டு வந்துகொடுத்தேன் தட்டிப் பறிப்பது போல்பிடுங்கிக்கொண்டுகிளம்பியது வாய்விட்டு“ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?”எனத் துணுக்குற்றேன் “ம்ஹும்” நவில்வதும்மறப்பதும்”மானுடத்தின் இயல்பன்றோ?”எனச் சிரித்தவாறேஅகன்றதுஅந்த மந்தி.
Published on April 21, 2025 21:25