ஆத்மாவிலிருந்து பேசுதல்

எழுத்தே என் பிராணன்அந்த எழுத்துடன் பயணிப்பவளென்மோகினிக்குட்டிஅவளோடுகூடஆத்மாவிலிருந்து பேசுவதில்லைகாரணமொன்றுமில்லைசிறைக்கூடத்திலிருந்து எவரேனும்ஆத்மாவிலிருந்து பேச முடியுமா? இந்தப் பேச்சு எதற்கென்றால்ஒருநாள் என் மனையாள் சொன்னாள்யாருடனோ நீ ஆத்மாவிலிருந்துபேசிக்கொண்டிருந்தாய்.சொல்லும்போதுஏக்கத்தின் கேவல்தெறித்து விழுந்தது யோசித்து யோசித்துக் களைத்தேன் ஒருநாள் எதேச்சையாகத்தெரிந்ததுபிராணனைவிட முக்கியமானதேதேனுமுண்டா?உண்டென்றாலதுகவிதை கவிதை பற்றியேஅந்தக் கவிஞனுடன்பேசுவதுண்டுஆத்மார்த்தமாகத்தான் ஆத்மார்த்தியுடன் ஆத்மார்த்தமாகஅல்லாமல் வேறெப்படிப் பேசமுடியும்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2025 23:20
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.