1 இந்த நேரம் பார்த்துநான் பார்த்துப் பழகியவொருதெருநாய் அனாதையாய்செத்துப் போயிற்றுசெத்துப் போவது இயல்புதான்மரணமொன்றும் புதிதல்லஅந்த நாயும் வயதானதுதான்சமீபத்திலேதான் அதற்கு நான்உணவிட ஆரம்பித்தேன்அப்படியாகத்தான் அந்த உறவுஆரம்பித்தது நேற்று மாலை காய்கறி வாங்கவெளியே சென்ற போதுஅந்த நாய் சாலையோரத்தில்உயிருக்கு இழுத்தபடிகிடந்ததைக் கண்டு அதனருகேஓடினேன்ஒருதுளி தண்ணீர் வேண்டும்இறுதித்துளி அந்தத் தெருவில் ஒரேயொருசெல்ஃபோன் கடை மட்டுமேஇருந்ததுஓடிப் போய் கொஞ்சம் தண்ணீர்கேட்டேன்அதிர்ச்சியாகப் பார்த்தான் அந்தவடகிழக்குப் பிராந்திய மனிதன்அவனோடு ஓட்டை இந்தியில்மல்லுக்கு நிற்க நேரமில்லை ஓட்டமாய் ஓடிவீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலைஎடுத்து வந்தேன் அதற்குள் நாயின் உயிர்பிரிந்திருந்தது ...
Read more
Published on April 20, 2025 07:49