1.மௌனம் இதுவரை அறிந்த மௌனம் ரம்யம் நீ வந்த பிறகு அறியுமிந்த மௌனம் குருதி கொப்புளித்தோடும் ரணகளம் எத்தனையோ ஆயிரம் பேர் அறிந்த மௌனம் பாடிய மௌனம் துக்கித்த மௌனம் உடலைத் துறந்து உயிரை மாய்த்த மௌனம் ஏடுகளில் படித்ததுண்டு பாடல்களில் கேட்டதுண்டு வாதையாய் அறிந்ததில்லை சாட்சியாய் நகரும் நிலவே கூழாங்கற்களை அடித்து விளையாடி ஓடும் நதியே இலைகள் சலசலக்க சரசமாடிச் செல்லும் தென்றலே அவளிடம் இதை மறக்காமல் சொல்லி விடுங்கள் நானொரு சொல்லாகி சொல்லுக்குள் மறைந்து ...
Read more
Published on April 14, 2025 07:57