என்னிடம் உனக்கு எதுயெது முதல்முதல் எனக் கேட்கிறாய் குறைவாய் அணியும் உனது ஆடைகளை சமரசமாய் ஏற்றது முதல் ஸ்பர்ஸம் கொண்டாலே உனக்கு கலவிக்கான மனநிலை வந்து விடுகிறதென்பதால் இன்று உன்னைத் தொடாமலிருந்தது முதல் என்னை நீ அடித்து விளையாடுவது முதல் அக்கார அடிசில் கேட்டேன் கருவாட்டுக் குழம்பு கேட்டேன் விரால்மீன் தலைக்குழம்பு கேட்டேன் மிக நீண்ட காலமாகக் கிடைக்காமலிருந்த ஃபுல்க்காவும் கருப்புக் கொண்டைக்கடலைக் கறியும் கேட்டேன் நானெழுதும் நாவலை என்னோடு சேர்ந்தெழுது என்றேன் கேட்டதெல்லாம் கிடைக்கத் தந்தாய் ...
Read more
Published on April 04, 2025 22:11