சாருவின் பெட்டியோ நாவலை மிகத் தாமதமாக வாசித்தேன். இப்படி ஒரு நாவல் வெளிவந்த பிறகு எப்படி பேசுபொருள் ஆகாமல் போனது என்று வியப்பாக இருந்தது. ஆனால் அப்படி பேசுபொருள் ஆகியிருந்தால் தமிழர்கள் வாழ்வியலில் அடுத்தகட்ட நகர்வு வந்துவிட்டார்கள் என்றாகிவிடும். ஆகவே பெட்டியோ இப்படி தண்ணீரில் கிடக்கும் கல்லாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பெட்டியோ வாசித்தபோது சாருவின் நாவல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. ஸீரோ டிகிரி படித்த போது ஏற்பட்ட பரவசம் அப்படியே இந்த நாவல் வாசிக்கும் ...
Read more
Published on February 22, 2025 21:06