அவந்திகாவை அடிப்பீர்களா சாரு என்று கேட்டார் இல்லையா என் மஹாத்மா நண்பர்? அந்தக் கேள்விக்கு இணையான கேள்வி எது என்று நான் சென்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளாக நான் அவந்திகாவை புதுமைப்பித்தன் எழுதிய செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை எப்படித் தன் மனைவி செல்லம்மாளை கவனித்துக்கொள்கிறாரோ அப்படித்தான் நானும் அவந்திகாவை முப்பது ஆண்டுகளாக கவனித்து அவளுக்கு சேவை செய்து வருகிறேன். சிங்கப்பூருக்கு மூன்று மாத வீசாவில் சென்றிருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அவந்திகாவுக்கு ...
Read more
Published on January 23, 2025 07:06