அராத்துவின் புருஷன் படித்துக்கொண்டு இருக்கிறேன். நூற்றைம்பது பக்கங்கள் தாண்டியுள்ளேன். நூறு பக்கங்களைத் தாண்டியுவுடன் ஒளியின் வேகத்தில் செல்கிறது. அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் Further reading என்று மேலும் சில கட்டுரைகளைப் படிக்க இணைப்பு கொடுத்திருப்பார்கள் (bibliography அல்ல). இந்தச் சிறுகுறிப்பை further reading-ஆக அணுக வேண்டுகிறேன். புருஷன் வெளியீட்டு விழாவில் சாருவின் உரையை அராத்து டிவியில் நேற்று பார்த்தேன். சாருவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், பேசும்போதும் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். மன நோய் ...
Read more
Published on January 22, 2025 04:59