கடந்த ஞாயிறு (17.11.2024) அன்று மாலை தி.நகர் சோஷியல் கிளப்பில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சுமார் நானூறு பேர் வந்திருந்தார்கள். இன்னும் சற்று பெரிய அரங்காக இருந்திருந்தால் வந்திருந்த இன்னும் நூறு பேருக்கு இடம் கிடைத்திருக்கும். இடம் இல்லாததால் சுமார் நூறு பேர் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இத்தனை கூட்டத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாஸ்கரனுக்கு இவ்வளவு நண்பர்கள் ...
Read more
Published on November 20, 2024 05:46