ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி
போதமும் காணாத போதம் துங்கதை நூல் குறித்து எழுத்தாளர் லோகமாதேவி அவர்கள் எழுதிய மதிப்புரை சொல்வனம் சித்திரை மாத இதழில் வெளியாகியுள்ளது. சிறந்த அவதானங்களை முன் வைத்திருக்கிறார். நூல் குறித்து வெளியாகும் சிறந்த தொடக்கமா இக்கட்டுரை அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி.
“அகரமுதல்வனின் மொழியில் காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை, உக்கிரமான தாக்குதல்களின் போது காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில் பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை, காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது
பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது. காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.”
The post ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

