விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம் பதிவு 2022

அன்புள்ள நண்பர்களுக்கு,

இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 17, 18 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரங்குகளில் பங்குபெறவிரும்பும் நண்பர்களில் இரவு தங்குமிடம் தேவைப்படுபவர்கள் மட்டும் இந்த படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். (வெளியிடங்களில் தங்கி அரங்குகளில் விழாவில் பங்கெடுக்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து படிவத்தை நிரப்ப வேண்டாம்.)

விழா நாட்களில் 17ம் தேதி காலை 6.00 மணி முதல் 18 ஆம் தேதியும், மறுநாள் 19ம் தேதி காலை 6.00 மணி வரை மட்டுமே தங்குமிடம் ஒருக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் வருகையை அந்த நேரத்திற்குள் அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பதிவு செய்தவர்களுக்கான மின்னஞ்சல் டிசம்பர் 10ம் தேதிக்குள் அனுப்பப்படும். பதிவு செய்த அனைவருக்குமே இடம் இருக்கும் என்பதால் பதற்றம் தேவையில்லை.வழக்கமான தங்குமிடமான ராஜா நிவாஸ் இம்முறை மூடப்பட்டுவிட்டது. எனவே நேரடியாக அங்கு எவரும் செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

(தங்குமிடம் நிரப்புவதில் சிரமம் இருப்பின் 98843 77787 திரு ஸ்ரீனிவாசன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்)

விஷ்ணுபுரம் விழா தங்குமிட படிவம்

நன்றி

விழாக் குழுவினர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2022 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.