வாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்

மதிப்பிற்குரிய கிருஷ்ணன் சார் அவர்களுக்கு,

வாசிப்புக்காக இத்தனை செறிவான ஒரு முகாம் நடத்த முடியும் என்பதை உணர்த்தியதற்காக அன்புகள். முகாம் பற்றிய என்னுடைய அனுபவங்களை இப்படி தொகுத்துக் கொள்கிறேன்.

தளத்தில் அறிவிப்பு வந்தவுடன் அதை பற்றிய ஆவல் பற்றிக்கொண்டது. வெவ்வேறு வாசிப்பு, வாழ்க்கை பின்னணி கொண்ட பல்வேறு நபர்கள் ஒன்றுகூடி இரண்டுநாட்கள் வாசிப்பு மற்றும் அது தொடர்பான சிந்தனைகளுடன் மட்டுமே வாழ இம்முகாம் பெரிதும் உதவியது. என்னைப்போன்ற ஆரம்ப நிலை வாசகரும் முழு பலனையும் அடையும் வகையில், பயிற்சிக்கு முன்பே வாசித்து வரவேண்டிய படைப்புகள், அதிலும் வெவ்வேறு தன்மை கொண்ட சிறுகதை, கட்டுரை, கவிதைகள் தெரிவு செய்து கொடுத்த பட்டியல் பெரும் உதவியாக இருந்தது.

எந்த ஒரு பயிற்சியும் முதலில் பங்குபெறும் அனைவரையும் ஒரு சமமான  புரிதல் தளத்திற்கு கொண்டுவந்த பிறகே, அதிலிருந்து மேலதிக  கல்வி தொடரமுடியும் என்பதை கற்றுக் கொண்டேன். படைப்பை வாசித்து வந்து, கலந்துரையாடல் வழியாக பிற வாசர்கள், ஆசிரியர்களுடன் விவாதிக்கும் பொழுது என்னுடைய வாசிப்பு போதாமைகளை கண்டுகொள்ள முடிந்தது.

படைப்பு ஆசிரியர்களை ஒரு வாசகன் அணுக தடையாக இருக்கும் அனைத்து இடர்களையும் இத்தகைய ஒரு ஏற்பாடு தகர்த்தெறிந்தது. ஆசிரியர்கள் அனைவரும் கேட்கப்படும் ஒவ்வொரு சந்தேகங்களுக்கும் இவ்வளவு நிதானமாகவும், தெளிவுடனும் பதில் கூறுவதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது, மேலும் அதுவே எழுத்தின், வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்தது. இத்தகைய ஒரு நேரடி கலந்துரையாடல் மூலமாக ஒரு வாசகர் அடையும் அனுகூலங்களை நிச்சயமாக கடிதங்கள், zoom உரையாடல்கள் மூலமாக அடைய சாத்தியமில்லை. நேரடி கலந்துரையாடலின் முக்கியத்துவத்தை இத்தகைய கூடுகைகளே நிரூபிக்க முடியும்.

வாசிப்பை இப்படியொரு ஒரு வகுக்கப்பட்ட, வகுப்பறை பாணி முறைமைகளை கொண்டு பயிற்றுவிக்க கூடிய முகாம்களை பகடி செய்வது பொது வழக்கம், ஆனால் இன்று வளர்ந்து வரும் ஒரு வாசகர் நம் சூழலில் சந்திக்கும் மிகமுக்கியமான சிக்கல்களை நன்குணர்ந்த விஷ்ணுபுரம் போன்றதோர் வாசகர் வட்டத்தினால்தான் இத்தகைய கூடுகைகளின் அவசியத்தை உணர்ந்து, இக்கூடுகைகளை ஒருங்கிணைக்க முடியும்.

அன்றாட புழக்க வாழ்க்கையிலிருந்து, முற்றிலும் தொடர்பில்லாத ஒரு இடத்தில் கூடி, ஒரு உரையாடல் நிகழும் போது அதன் ஆற்றல், தெளிவு, ஆழம் எவ்வளவு பரிசுத்தமானது, தீவிரமானது என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டேன். அத்தகையதோர் உரையாடலை  வாசிப்பு போன்றதோர் படைப்பு செயலுக்கு ஏற்பாடு செய்த உங்களை மனதார தழுவிக்கொள்கிறேன்.

Time and again, Vishnupuram literary circle has demonstrated that, purely with conviction, any virtuous action can be planned, executed with utmost efficiency and deliver excellence in outcome. Resource or cost should not be an excuse for mediocracy.

With immense love and respect,

Vivek

Bangalore.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.